Penang Tannirmalai Morning Darisanam

தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! ??

DATE : 14/01/2023 – சனிக்கிழமை காலை அலங்காரம் ??⚜️

✡️ அழைத்தால் வருவாரா ஆம் தன்னை முழுதும் நம்பி அழைத்தோர்க்கு விரைந்தே வந்து வினை தீர்ப்பவன் கந்தன்.

? செய்யும் செயல்களை அதன் பலன்களை அவனே செய்விக்கின்றான், அவனே பலனும் தருகின்றான் என உளமார உணர்வோருக்கு அவன் காலமாகவே நின்று உதவுகின்றார்.

⚜️ வள்ளியம்மையுடன் மயிலேறி வந்து உதவுவான் கந்தன்.

? நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே கந்தரலங்காரம்.

முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! ??⚜️

♥️♥️♥️ ஓம் சரவண பவ ஓம் ♥️♥️♥️

Pogi: 5 things shouldn’t do

போகி அன்று செய்யக் கூடாத 5 விஷயங்கள் :

  1. இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வரவேற்று வணங்கும் நாள் என்பதால் இந்த நாளில் மாமிசம் சமைக்கக் கூடாது. போதை வஸ்துக்கள், பகல் உறக்கம் எதுவும் கூடாது என்பர்.
  2. போகி அன்று சிலர் வெள்ளை அடித்து வீட்டை சுத்தப்படுத்துவார்கள். அதைவிட போகிக்கு முன்னரே சுத்தப்படுத்துவதே முறையானது. போகி அன்று வழிபாடு செய்வதே நன்று. மூடப் பழக்கங்கள், தீய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், மனக்கசப்புகள், உறவுகளிடம் சர்ச்சை போன்றவற்றை ‘ருத்ர ஞான யக்ஞம்’ என்று அழைக்கப்படும் நம் மன யாகக் குண்டத்தில் எரித்துவிட வேண்டும் என்பதே போகி நாளின் தத்துவம்.
  3. நகரங்களில் சாஸ்திரத்துக்காக பழைய துணிகள், கிழிந்த பாய்களை கொஞ்சமாக எரித்த காலம் போய், இப்போது எல்லாம் டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும் எரித்து காற்றை மாசாக்குவது செய்யவேக் கூடாத செயல் எனலாம்.
  4. புது மழையால் நிரம்பி இருக்கும் கிணறு, குளம் போன்றவற்றின் நீர் சுவையாகும் வகையில், சுத்தமாகும் வகையில் முன்பு அந்நீரில் நெல்லி, பனை போன்ற மரங்களின் துண்டை போடுவார்கள். இந்த அடிப்படை தெரியாமல் இப்போது கிராமங்களில் பெருமளவு மரங்களை வெட்டி நீரில் போடும் வழக்கத்தை செய்யவேக் கூடாது.
  5. பெரும்பாலான கிராமங்களில் இருக்கும் ஏரிகளில் மீன் பிடிக்கும் விழா நடைபெறும். அப்போது ஊர் கூடி மீன் பிடிக்கலாம் தவறு இல்லை. ஆனால் ஏரியை அழித்து மீன் பிடிக்கிறோம் என்ற பெயரில் நீரை எல்லாம் வெளியே இறைத்துவிடுவது தவறானச் செயல். இதைச் செய்யவே கூடாது.

இயற்கைக்கு எதிரான, காற்றை மாசுபடுத்தும் எந்த செயலையும் செய்யாமல் இந்த போகிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.

Spiritual Enlightenment

மூவார் இந்து சங்க வட்டார பேரவையின் ஏற்பாட்டில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆத்மா ஞானம் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் திரு கா பெருமாள் ஐயா அவர்கள் இந்த சமய உரையை ஆற்றினார், நன்றி வணக்கம்

1 2

Search

+