Sri Sunthara Moorthy Vinayagar, Bachang Baru MELAKA.
Dear Devotees, Om Gam Ganapathy… Ubayam: MORNING PONGGAL PRAYERS Date: 15-1-2023 (Sunday) POOJA PROGRAM : 7.30am: Poojai 8.00am: Ponggal 9.00am: Special Pooja, Arathi and Prasadam. Do come and get blessings from our Beloved GANESHA. Your kind presence at the temple shall be much appreciated. Management Committee 🙏🏻
இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வரவேற்று வணங்கும் நாள் என்பதால் இந்த நாளில் மாமிசம் சமைக்கக் கூடாது. போதை வஸ்துக்கள், பகல் உறக்கம் எதுவும் கூடாது என்பர்.
போகி அன்று சிலர் வெள்ளை அடித்து வீட்டை சுத்தப்படுத்துவார்கள். அதைவிட போகிக்கு முன்னரே சுத்தப்படுத்துவதே முறையானது. போகி அன்று வழிபாடு செய்வதே நன்று. மூடப் பழக்கங்கள், தீய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், மனக்கசப்புகள், உறவுகளிடம் சர்ச்சை போன்றவற்றை ‘ருத்ர ஞான யக்ஞம்’ என்று அழைக்கப்படும் நம் மன யாகக் குண்டத்தில் எரித்துவிட வேண்டும் என்பதே போகி நாளின் தத்துவம்.
நகரங்களில் சாஸ்திரத்துக்காக பழைய துணிகள், கிழிந்த பாய்களை கொஞ்சமாக எரித்த காலம் போய், இப்போது எல்லாம் டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும் எரித்து காற்றை மாசாக்குவது செய்யவேக் கூடாத செயல் எனலாம்.
புது மழையால் நிரம்பி இருக்கும் கிணறு, குளம் போன்றவற்றின் நீர் சுவையாகும் வகையில், சுத்தமாகும் வகையில் முன்பு அந்நீரில் நெல்லி, பனை போன்ற மரங்களின் துண்டை போடுவார்கள். இந்த அடிப்படை தெரியாமல் இப்போது கிராமங்களில் பெருமளவு மரங்களை வெட்டி நீரில் போடும் வழக்கத்தை செய்யவேக் கூடாது.
பெரும்பாலான கிராமங்களில் இருக்கும் ஏரிகளில் மீன் பிடிக்கும் விழா நடைபெறும். அப்போது ஊர் கூடி மீன் பிடிக்கலாம் தவறு இல்லை. ஆனால் ஏரியை அழித்து மீன் பிடிக்கிறோம் என்ற பெயரில் நீரை எல்லாம் வெளியே இறைத்துவிடுவது தவறானச் செயல். இதைச் செய்யவே கூடாது.
இயற்கைக்கு எதிரான, காற்றை மாசுபடுத்தும் எந்த செயலையும் செய்யாமல் இந்த போகிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
மூவார் இந்து சங்க வட்டார பேரவையின் ஏற்பாட்டில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆத்மா ஞானம் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் திரு கா பெருமாள் ஐயா அவர்கள் இந்த சமய உரையை ஆற்றினார், நன்றி வணக்கம்
ஒரு சிலர் இந்த படி கட்டு எதற்காக இருப்பது என்று புரிவதில்லை மிதித்து செல்வதையே என் கண்ணூடாக பார்த்திருக்கின்றேன்
உங்களது குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்
கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.
ஏன் தெரியுமா?
ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..
பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் …
இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் …
பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..
அந்த படியை தாண்டும் போது, ” நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..
இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் …
அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் …
ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் …
எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.